10 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது தென் ஆப்பிரிக்கா
- முதலில் ஆடிய வங்காளதேசம் 113 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
கேப் டவுன்:
மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வங்காளதேசம் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் நிகர் சுல்தானா 30 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. இதில் அதிக ரன்ரேட்டில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்குச் செல்ல முடியும் என்பதால் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது.
தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா விக்கெட் இழப்பின்றி 117 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 4 போட்டிகளில் 2-ல் வென்றது. மேலும் தென் ஆப்பிரிக்கா ரன்ரேட்டில் புள்ளிப்பட்டியலில் இரண்டாமிடம் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.