இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: அசலங்கா தலைமையில் இலங்கை அணி அறிவிப்பு
- இலங்கையின் அணியின் கேப்டனாக அசலங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- தனஞ்ஜெயா மற்றும் மேத்யூஸ் அணியில் இடம் பெறவில்லை.
இந்திய கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. முதலில் டி20 தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி வருகிற 27-ந் தேதி நடக்கிறது.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கையின் அணியின் கேப்டனாக அசலங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தனஞ்ஜெயா மற்றும் மேத்யூஸ் அணியில் இடம் பெறவில்லை. சதீர சமரவிக்ரம மற்றும் தில்ஷன் மதுஷங்கா ஆகியோரும் அணியில் இருந்து வெளியேறினர். அதற்கு பதிலாக சமிந்து விக்ரமசிங்க, பினுர பெர்னாண்டோ மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ போன்றவர்களை தேர்வுக்குழு தேர்வு செய்தது.
இந்தியாவுக்கு எதிரான இலங்கை டி20 அணி விவரம்:-
சரித் அசலங்க (கேப்டன்), பதும் நிசங்கா, குசல் ஜனித் பெரேரா, அவிஷ்கா பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், தினேஷ் சண்டிமால், கமிந்து மெண்டிஸ், தசுன் ஷனகா, வணிந்து ஹசரங்கா, துனித் வெல்லலகே, மகேஷ் தீக்ஷனா, சமிந்து விக்ரமசிங்க, மதீஷ பத்திரனா, நுவான் துஷாரா, துஷ்மந்த சமீரா, பினுர பெர்னாண்டோ.