கிரிக்கெட் (Cricket)

மகளிர் டி20 உலக கோப்பை- இந்தியாவை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து

Published On 2023-02-18 16:38 GMT   |   Update On 2023-02-18 16:38 GMT
  • இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
  • அரை சதம் அடித்த ஸ்மிருதி மந்தனா 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் விளையாடின. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக நாட் ஸ்கிவர் பிரண்ட் 50 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி ரன் குவித்தார். மறுமுனையில் ஷபாலி வர்மா (8), ஜெமிமா (13), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (4) விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

அரை சதம் அடித்த ஸ்மிருதி மந்தனா 52 ரன்களில் ஆட்டமிழந்தார். தீப்தி சர்மா 7 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

நெருக்கடிக்கு மத்தியில் சிறப்பாக ஆடிய ரிச்சா கோஷ் இலக்கை எட்ட போராடினார். ஆனால் 20 ஓவர் முடிவில் இந்திய அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களே சேர்க்க முடிந்தது. ரிச்சா கோஷ் 47 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் இங்கிலாந்து அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாட் ஸ்கிவர் பிரண்ட் சிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Tags:    

Similar News