- சாலையினுள் சுவத்தி என்னும் சொல்லைச்சொல்லி, மெல்ல மெல்ல பசுக்களை புகுவித்து, சிரத்தையோடு புல்லைக் கொடுக்க வேண்டும்.
- அஷ்டமி தோறும் பசுக்களை நீராட்டி, பூச்சூட்டி, அன்னமும் ஜலமும் ஊட்டி, தீப தூபம் காட்டி வணங்க வேண்டும்.
கோமாதா என்று அழைக்கப்படும் பசு பூவுலகில் லௌகீக ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் பல பல நன்மைகளைத் தருகிறது.
கேட்ட வரத்தை நல்கும் பசுவை எவ்வாறு பராமரித்து போற்ற வேண்டும் என்பது பற்றி சிவதருமோத்தரம் கீழ்கண்ட வாறு கூறுகிறது:
பழங்காலத்தில் பசுக்களைக்கட்டும் தொழுவத்தினை கோவிலாகவே கருதினர்.
இதனை "ஆக்கோட்டம்" என இலக்கியங்கள் குறிப்பிடுகிறது. பசுமடம் என்றும் வழங்குவர். அப்பசுமடத்தினை விதிப்படி செய்விக்க வேண்டும்.
அதாவது,ஆற்றுமண், ஓடை மண், புற்றுமண், வில்வத்தடி மண், அரசடி மண் என்பவைகளால் கொட்டிலின் தரைப்பகுதியை அமைக்க வேண்டும். முதிர்கன்று, இளங்கன்று, நோயுற்ற கன்று ஆகியவற்றிக்கு வெவ்வேறு இடங்களை அமைக்க வேண்டும்.
நாள் தோறும் கோசல, கோமலங்களைப் புறத்தே நீக்கி சுத்தம் செய்ய வேண்டும். துர்நாற்றம் வராமல் தூபம் இட வேண்டும். தீபங்கள் ஏற்றவேண்டும்.
சாலையினுள் சுவத்தி என்னும் சொல்லைச்சொல்லி, மெல்ல மெல்ல பசுக்களை புகுவித்து, சிரத்தையோடு புல்லைக் கொடுக்க வேண்டும்.
நோயுற்ற பசுக்களுக்கு தனியிடம் அமைத்து, மருந்து அளித்து பேண வேண்டும்.
அஷ்டமி தோறும் பசுக்களை நீராட்டி, பூச்சூட்டி, அன்னமும் ஜலமும் ஊட்டி, தீப தூபம் காட்டி வணங்க வேண்டும்.
வேனிற் காலத்தில் பசுக்களை சோலைகளிலும், மழைக்காலத்தில் மலைச்சாரல் வனங்களிலும், பனிக் காலத்தில் வெயில் மிகுந்த வெளிகளிலும் மேய்க்க வேண்டும்.