ஆன்மிக களஞ்சியம்

தஞ்சை மண்டலத்தில் தனித்தனி நவக்கிரகங்களுக்கான கோவில்கள்

Published On 2024-12-23 11:28 GMT   |   Update On 2024-12-23 11:28 GMT
  • சிவன் கோவில்களில் நவக்கிரக சன்னதி இருக்கும். அங்கு வழிபடுவது என்பது பொதுவான பரிகாரமாகத் தான் இருக்கும்.
  • தமிழ்நாட்டில் தஞ்சை மண்டலத்தில் நவக்கிரகங்களுக்கு தனித்தனி ஆலயங்கள் உள்ளன.

சிவன் கோவில்களில் நவக்கிரக சன்னதி இருக்கும். அங்கு வழிபடுவது என்பது பொதுவான பரிகாரமாகத் தான் இருக்கும்.

எனவே ஒவ்வொரு கிரகமும் தனி சன்னதியில் இருந்து அருளாட்சி செய்யும் கோவில்களுக்கு சென்று பரிகார பூஜை செய்தால் உரிய பலன்களுடன் கூடுதல் பலன்கள் உடனே கிடைக்கும்.

தமிழ்நாட்டில் தஞ்சை மண்டலத்தில் நவக்கிரகங்களுக்கு தனித்தனி ஆலயங்கள் உள்ளன.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் திருமங்கலக்குடி அருகே சூரிய பகவானுக்கு சூரியனார் கோவில் உள்ளது.

திருவையாறு தாலுகா திங்களூரில் சந்திரகிரகத்துக்கு தனிக்கோவில் உள்ளது.

செவ்வாய் கிரகத்துக்கு வைத்தீஸ்வரன் கோவிலில் தனி கோவில் உள்ளது.

புதனுக்கு திருவென்காட்டிலும், வியாழன் (குரு) கிரகத்துக்கு ஆலங்குடியிலும், சுக்கிரனுக்கு (வெள்ளி) கஞ்சனூரிலும் சனி கிரகத்துக்கு திருநள்ளாறிலும், ராகுவுக்கு திருநாகேசுவரத்திலும், கேது பகவானுக்கு கீழப் பெரும் பள்ளத்திலும் கோவில்கள் அமைந்துள்ளன.

Similar News