ஆன்மிக களஞ்சியம்
வலது புறம் கோபம் இடது புறம் சாந்தம்
- இந்தக் காட்சி சேத்திர புராணேஸ்வரர் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தை வலது புறமாய் இருந்து பார்த்தால் அம்பாள் மிக கோபமாகவும், இடது புறமாய் இருந்து பார்த்தால் சாந்தமாகவம் தெரியும்.
சூரியன் இங்கே மேகநாதரை வழிபட்டு கருமை நீங்கிச் செவ்வொளி பெற்று இன்புற்றார்.
மேகநாதர் சந்நிதி கோஷ்ட தெய்வமாக விளங்குவது சேத்திர புராணேஸ்வரர் சிற்பம்.
சிவசாபத்திலிருந்து விமோசனம் பெற சூரியன் திருமீயச்சூரில் தங்கினான்.
சாபத்தின் கடுமையால் சீக்கிரம் விமோசனம் வேண்டி சூரியன் அலறிய குரல், ஏகாந்தமாய் இருந்த அம்பாளுக்கு பாதிப்பை உண்டாக்கியது.
அதனால் கோபமடைந்து, சூரியனை சபிக்கத் திருப்புகிறாள்.
சுவாமி அம்பாளின் முகவாயைப் பிடித்து நான் ஏற்கனவே கொடுத்த சாபத்தினால் இவ்வுலகம் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டது. நீயும் சபிக்காதே என்றார்.
இந்தக் காட்சி சேத்திர புராணேஸ்வரர் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிற்பத்தை வலது புறமாய் இருந்து பார்த்தால் அம்பாள் மிக கோபமாகவும், இடது புறமாய் இருந்து பார்த்தால் சாந்தமாகவம் தெரியும்.