ஆன்மிக களஞ்சியம்
தேவியின் அருளன்றி இதனை பெற முடியாது
- அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான்.
- இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலேதோஷங்கள் விலகிவிடும்.
இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதிதேவி நர்த்தனம் ஆடுவாள்.
எதிரிகளை பேசமுடியாது வாக்ஸ்தம்பம் செய்துவிடுவாள்.
அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான்.
இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலேதோஷங்கள் விலகிவிடும்.
ஸ்ரீ வித்யை போன்று மந்திரமோ, ஸ்ரீ லலிதாம்பிகையைப் போன்று தேவதையோ, லலிதா சகஸ்ரநாமம் போன்று ஸ்தோத்திரமோ உலகில் இல்லை.
பூர்வ ஜென்ம புண்ணியத்தால் மட்டுமே இதனைப் பாராயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும்.
கடைசிப் பிறவியாக இருந்தால் மட்டுமே ஸ்ரீவித்யா ஜெபமும், சகஸ்ரநாம பாராயணமும் செய்ய முடியும்.
தேவியின் அருளின்றி யாரும் இதனைப் பெறமுடியாது "என்றெல்லாம் பலவாறாக பலச்ருதி என்ற பகுதியில் ஹயக்ரீவர் அகத்தியருக்கு உபதேசிக்கிறார்.