சூரியன் அருள்புரிந்த திருமீயச்சூர்
- அகிலம் சிறக்க தனது திவ்ய நாமங்களைக் கொண்டே வசினீ தேவதைகள் மூலமாக ஸ்ரீ லலிதா சகரஸ்ரநாமத்தை உருவாக்கிய தலம் திருமீயச்சூர்.
- இங்கு லலிதாம்பிகை ஸ்ரீசக்ரபீடத்தில் மனோன்மணி ரூபமாக அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.
அன்னை ஸ்ரீ லலிதாம்பிகை அருளும் அற்புதத்தலம் திருமீயச்சூர்.
அகிலம் சிறக்க தனது திவ்ய நாமங்களைக் கொண்டே வசினீ தேவதைகள் மூலமாக ஸ்ரீ லலிதா சகரஸ்ரநாமத்தை உருவாக்கிய தலம் திருமீயச்சூர்.
இங்கு லலிதாம்பிகை ஸ்ரீசக்ரபீடத்தில் மனோன்மணி ரூபமாக அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.
திருவாரூர் மாவட்டம் பேரளத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம்.
வேளாக்குறிச்சி ஆதீனத்தின் கீழ் உள்ள தலம்.
திருமீயச்சூர் மற்றும் இளங்கோவில் இரண்டும் ஒரே ஆலயத்திற்குள் திகழ்கின்றன.
இவை சம்பந்தராலும், அப்பராலும் பாடப்பெற்றன.
மூலவர் சுயம்புலிங்கத் திருமேனி (மேகநாதர்), அம்பாள் சவுந்தரநாயகி, லலிதாம்பிகை, கோபுரங்கள் கஜப்பிருஷ்ட விமான அமைப்பில் உள்ளன.
இக்கோவிலின் வடக்குப் பிராகாரத்திலுள்ள இளங்கோவில் இறைவன் ஸ்ரீசகலபுவனேஸ்வரர். அம்பிகை மின்னல் மேகலாம்பாள்.
உட்பிராகாரத்தில் விநாயகர், வில்லேந்திய முருகர், பஞ்ச பூதலிங்கங்கள் தனித்தனியே அஷ்டதிக் பாலகர்கள், சப்த மாதர்கள் பூஜித்த லிங்கங்கள், சேத்ர புராணேஸ்வரர், கல்யாண சுந்தரர், துர்க்கை, சூரியன் முதலிய சந்நிதிகள் உள்ளன.