அண்ணாமலையாரை குளிர்விக்கும் தாரா அபிஷேகம் பலன்கள்
- சிவபெருமானின் உக்கிரம் தணிய வேண்டுமானால், பூமி குளிர வேண்டும்.
- இதை கருத்தில் கொண்டும் அக்கினி நட்சத்திர நாட்களில் சிவபெருமானுக்கு தாரா அபிஷகம் செய்யப்படுகிறது.
சைவத்தில் சிவபெருமானே.... நாம் வாழும் உலகமாக கருதப்படுகிறார்.
சிவபெருமானின் உக்கிரம் தணிய வேண்டுமானால், பூமி குளிர வேண்டும்.
இதை கருத்தில் கொண்டும் அக்கினி நட்சத்திர நாட்களில் சிவபெருமானுக்கு தாரா அபிஷகம் செய்யப்படுகிறது.
தாரா அபிஷேகம் செய்யப்படுதால் திருவண்ணாமலை ஆலயத்தின் தினசரி வழிபாட்டு முறைகளில் எந்தவித மாற்றமும் செய்ய மாட்டார்கள்.
வழக்கமான நேரங்களில் உரிய வழிபாட்டை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக லிங்கத்துக்கு சந்தனப் பொட்டு வைத்து, "ஓம் நமச்சிவாய" மந்திரத்தை சொல்லி, வெறும் தண்ணீரை ஊற்றி அபிஷேகம் செய்தாலே பலன் கிடைக்கும் என்பார்கள்.
ஜலதாரை எனப்படும் தாரா அபிஷேகம் செய்யும்போது அண்ணாமலையார் மனம் குளிர்ந்து அதிகமான பலன்களை வாரி வழங்குவார் என்பது நம்பிக்கையாகும்.
தாரா அபிஷேகம் செய்ய, தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து உதவி செய்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு சந்தான விருத்தி ஏற்படும். நோய்கள் நீங்கும்.
சர்க்கரை கலந்த பாலை தாராபிஷேகம் செய்தால் கெட்ட சக்திகள் நம்மை அணுகாது.
தீய எண்ணத்துடன் நம்முடன் பழகுபவர்கள் விலகி சென்று விடுவார்கள். பயம் நீங்கும்.
தாராபிஷேகம் தவிர பொதுவாக சிவபெருமானுக்கு தேன் அபிஷேகம் செய்தால் தோல் நோய் குணமாகும். கரும்புச் சாறு அபிஷேகம் செய்தால் முக்தி பெறலாம்.