ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் 4.12.2018 முதல் 10.12.2018 வரை

Published On 2018-12-04 03:30 GMT   |   Update On 2018-12-04 03:30 GMT
டிசம்பர் மாதம் 4-ம் தேதியில் இருந்து டிசம்பர் மாதம் 10-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
4-ந்தேதி (செவ்வாய்) :

பிரதோஷம்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.
திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
திருநாகேஸ்வரம் ஆலயத்தில் அருளும் திருநாகேஸ்வரர் புறப்பாடு கண்டருளல்.
சகல சிவன் கோவில்களிலும் மாலை வேளையில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை.
சமநோக்கு நாள்.

5-ந்தேதி (புதன்) :

மாத சிவராத்திரி.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
திருச்சானூர் பத்மாவதி தாயார் திருவீதி உலா.
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான், ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் ஆகியோர் புறப்பாடு கண்டருளல்.
கீழ்நோக்கு நாள்.

6-ந்தேதி (வியாழன்) :

அமாவாசை.
திருநாகேஸ்வரம் ஆலயத்தில் திருநாகேஸ்வரர் பவனி வருதல்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் புறப்பாடு கண்டருளல்.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஆலயத்தில் ராமருக்கு திருமஞ்சன சேவை.
திருப்பதி ஏழுமலையப்பன் ஆலயத்தில் புஷ்பாங்கி சேவை.
சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
சமநோக்கு நாள்.

7-ந்தேதி (வெள்ளி) :


மதுரை கூடலழகர் சன்னிதியில் பெரியாழ்வார் வென்ற கிளி விலாசம் எழுந்தருளல். கூடலழகர் கருடோற்சவம்.
சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வேதவள்ளி தாயாருக்கு திருமஞ்சன சேவை.
சமநோக்கு நாள்.



8-ந்தேதி (சனி) :

திருச்சானூர் பத்மாவதி தாயார் திருவீதி உலா.
திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் புறப்பாடு கண்டருளல்.
சகல விஷ்ணு ஆலயங்களிலும் திருப்பல்லாண்டு உற்சவம் ஆரம்பம்.
ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் திருமொழி திருநாள் தொடக்கம்.
கீழ்நோக்கு நாள்.

9-ந்தேதி (ஞாயிறு) :

ஸ்ரீரங்கம் நம்பெருமாள், காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஆகிய தலங்களில் பகற்பத்து உற்சவ சேவை.
ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் ராஜாங்க சேவை.
திருச்சானூர் பத்மாவதி தாயார் புறப்பாடு கண்டருளல்.
இன்று சூரிய வழிபாடு சிறப்பு தரும்.
கீழ்நோக்கு நாள்.

10-ந்தேதி (திங்கள்) :

சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆலயத்தில் 108 சங்காபிஷேகம், 1008 கலசாபிஷேகம்.
ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார், வேணுகான கண்ணன் திருக்கோலக் காட்சி.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், காலிங்க நர்த்தன திருக்கோலம்.
திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர், குன்றக்குடி, திருமயிலை ஆகிய தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கொலு தர்பார் காட்சி.
கீழ்நோக்கு நாள்.
Tags:    

Similar News