ஆன்மிகம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்

இந்த வார விசேஷங்கள் 24.3.2020 முதல் 30.3.2020 வரை

Published On 2020-03-24 04:28 GMT   |   Update On 2020-03-24 04:28 GMT
மார்ச் 24-ம் தேதியில் இருந்து மார்ச் 30-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
24-ந் தேதி (செவ்வாய்) :

* மன்னார்குடி ராஜகோபால சுவாமி வெள்ளி சேஷ வாகனத்தில் வீதி உலா.
* திருபுவனம் கோதண்டராம சுவாமி கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள், விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு காண்பித்தருளல்.
* மேல்நோக்கு நாள்.

25-ந் தேதி (புதன்) :

தெலுங்கு வருடப் பிறப்பு.
திருநெல்வேலி கரியமாணிக்கப் பெருமாள் கோவிலில் ஐந்து கருட சேவை.
திருபுவனம் கோதண்டராம சுவாமி திருவீதி உலா.
மன்னார்குடி ராஜகோபால சுவாமி வைர முடி சேவை, இரவு தங்க கருட வாகனத்தில் வைண்டநாதர் திருக்கோலமாய் காட்சி.
சமநோக்கு நாள்.

26-ந் தேதி (வியாழன்) :

மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோவில் உற்சவம் ஆரம்பம், அன்ன வாகனத்தில் சுவாமி வீதி உலா.
மன்னார்குடி ராஜகோபால சுவாமி காலை காளிங்க நர்த்தனம், மதியம் ஆண்டாள் திருக்கோலம், இரவு அனுமன் வாகனத்தில் ராமர் திருக்கோலமாய் புறப்பாடு.
திருபுவனம் கோதண்டராம சுவாமி பவனி வருதல்.
சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
திருப்பதி ஏழுமலையான் புஷ்பங்கி சேவை.
சமநோக்கு நாள்.

27-ந் தேதி (வெள்ளி) :

நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர உற்சவம் தொடக்கம்.
மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கல்யாணம், இரவு ராஜாங்க சேவை.
மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் இரவு சிம்ம வாகனத்தில் பவனி.
திருபுவனம் கோதண்டராம சுவாமி புறப்பாடு கண்டருளல்.
கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை.
திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.
சமநோக்கு நாள்.

28-ந் தேதி (சனி) :


சதுர்த்தி விரதம்.
திருநெல்வேலி, பழனி, மதுரை, குன்றக்குடி, சுவாமிமலை, திருப்பரங்குன்றம் ஆகிய தலங்களில் பங்குனி உத்திர உற்சவம் தொடக்கம்.
மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், சேஷ வாகனத்தில் கிருஷ்ணாவதாரக் காட்சி.
மன்னாா்குடி ராஜகோபால சுவாமி காலை பள்ளியறை சேவை.
கீழ்நோக்கு நாள்.

29-ந் தேதி (ஞாயிறு) :

கார்த்திகை விரதம்.
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் பவனி.
மன்னார்குடி ராஜகோபால சுவாமி நவநீத கிருஷ்ண சேவை, வெண்ணெய் தாழி சேவை, இரவு தங்க குதிரையில் ராஜாங்க அலங்காரம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள், திருபுல்லாணி ஜெகந்நாதப் பெருமாள் ஆகிய தலங்களில் உற்சவம் ஆரம்பம்.
திருவாரூர் தியாகராஜர் சுவாமி இந்திர விமானத்தில் புறப்பாடு.
கீழ்நோக்கு நாள்.

30-ந் தேதி (திங்கள்) :

முகூர்த்த நாள்.
பாளையங்கோட்டை கோபால சுவாமி கோவிலில் பங்குனி உற்சவம் ஆரம்பம்.
மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், ராமாவதாரக் காட்சி. இரவு அனுமன் வாகனத்தில் புறப்பாடு.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்திரப் பிரபையிலும், ரெங்கமன்னார் சிம்ம வாகனத்திலும் புறப்பாடு.
மன்னார்குடி ராஜகோபால சுவாமி ரத உற்சவம்.
ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் கோவில் உற்சவம் ஆரம்பம், அன்ன வாகனத்தில் திருவீதி உலா.
மேல்நோக்கு நாள்.

Similar News