ஆன்மிகம்
காவல் தெய்வங்களின் முக்கியத்துவங்கள்
பஞ்ச பூதங்களின் கூட்டாக குல தெய்வங்களை உருவாக்கி வழிபட்டு வந்திருக்கிறார்கள்.
குலம் காக்கும் தெய்வம் குல தெய்வம். இது வழிவழியாக வருவது, ஒவ்வொரு குடும்பத்திற்கும் பாரம்பரியமாக வழிபட்டுவரும் தெய்வம். ஆதிகாலத்தில் மனிதன் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தான். அப்போது பஞ்ச பூதங்களின் கூட்டாக குல தெய்வங்களை உருவாக்கி வழிபட்டு வந்திருக்கிறார்கள்.
இதேபோல்தான் காவல் தெய்வமும். இதில் குல தெய்வதிற்குரிய முக்கியத்துவம் என்னவெனில், எந்த நல்ல காரியம் செய்வதென்றாலும், எடுத்துக்காட்டாக திருமணம் என்று சொன்னால், முதல் திருமண பத்திரிகையை குல தெய்வத்திற்கு வைத்து வணங்கிவிட்டுத்தான் பிறகு மற்ற தெய்வங்களுக்கு வைத்து வணங்கி, பிறகு கொடுக்கத் தொடங்குவார்கள்.
காவல் தெய்வமும் மிக முக்கியமானது. காவல் தெய்வத்தை எல்லைக் கடவுள் என்றும் சொல்கிறோம். எந்த ஒரு நல்ல காரியத்தை முன்னெடுக்கும் போதும், காவல் தெய்வத்தை வணங்கிவிட்டு அல்லது அது இருக்கும் திசையை நோக்கியாவது ஒரு கற்பூரத்தை ஏற்றி வணங்கிவிட்டுச் செல்வர்.
ஐயனார் கோவில் என்பது ஊருக்கு வடக்கே ஐந்தாறு கிலோ மீட்டர் தாண்டித்தான் இருக்கும். ஐயனார், முனீஸ்வரர், கருப்புசாமி ஆகிய எல்லைக் கடவுள்கள் எல்லாம் ஊருக்கு வெளியேதான் இருக்கும். சில பெண் தெய்வங்களும் காவல் தெய்வங்களாக உள்ளன.
இந்த தெய்வங்களுக்கெல்லாம் உயிர்ப் பலி கொடுக்கும் வழக்கம் பண்டையக் காலத்தில் இருந்தே உள்ளது. இதை எதற்கு செய்கிறார்கள் என்றால், நாம் முன்னெடுக்கும் காரியத்தில் வழித்துணையாக காவல் தெய்வங்கள் இருக்கும் என்பதால்தான். வழித்துணைக் கடவுள் என்பதுதான் காவல் தெய்வம்.
நீண்ட பயணம் போகும் முன்னர் கூட, முன் சக்கரங்களில் இரண்டு எலுமிச்சை பழங்களை வைத்து நசுக்கிவிட்டு காவல் தெய்வங்களை வணங்கிவிட்டு செய்கிறோம். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்று கூறுகிறார்கள் அல்லவா? அந்த தெய்வம் இந்தக் காவல் தெய்வம்தான்.
மேலும் அந்த நாட்களில் எல்லாம், இப்போது உள்ளதுபோன்று சாலை, வாகன வசதிகளெல்லாம் கிடையாது, தனியாக, காட்டு வழியில் சென்றாக வேண்டும். அப்படி பல ஊர்களுக்குப் பயணம் ஆகும் போதெல்லாம், இப்படி ஆங்காங்குள்ள காவல் தெய்வங்களை வணங்கிக் கொண்டுதான் சென்று வந்தார்கள்.
அந்த அளவிற்கு காவல் தெய்வங்கள் மீது அவர்களுக்கு அதீத நம்பிக்கை இருந்தது. ஆகவே, குல தெய்வம் என்பது குலம் காக்க வந்த தெய்வம், குழந்தைக்கு முதல் முடி எடுப்பதில் இருந்து முதல் கல்யாண பத்திரிகை வைப்பது வரை வீட்டில் எந்த விசேடமானாலும் முதல் வணங்குதலுக்குரியது.