ஆன்மிகம்
நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக அலகு காவடி எடுத்து வந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

ஜலசந்திர மாரியம்மன் கோவில் திருவிழாவில் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

Published On 2017-07-29 09:27 IST   |   Update On 2017-07-29 09:27:00 IST
கும்பகோணம் ஜலசந்திர மாரியம்மன் கோவில் திருவிழா நடை பெற்றது. இதில் பக்தர்கள் அலகு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பாணாதுறை புதுத்தெருவில் ஜலசந்திர மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 21 -ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம், அலகு காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். அலகுகாவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்த பக்தர்களின் ஊர்வலம் காவிரி கரையில் இருந்து புறப்பட்டு கோவிலில் நிறைவடைந்தது.

விழாவில் இன்று (சனிக் கிழமை) மாரியம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) கஞ்சிவார்த்தலும், மாரியம்மன் வீதி உலாவும் நடக்கிறது. 31-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.

Similar News