வழிபாடு
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
- ஆஞ்சநேயருக்கு சுவர்ண அபிஷேகம் செய்யப்பட்டது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி நேற்று ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக சாமிக்கு எண்ணெய், சீககாய், பால், தயிர், மஞ்சள் மற்றும் சந்தனத்தால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து சுவர்ண அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகம் முழுவதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.