வழிபாடு

பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் யாகசாலை பூஜை

Published On 2022-06-23 09:25 IST   |   Update On 2022-06-23 09:25:00 IST
  • நாளை (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது.
  • நாளை மாலை சிறப்பு அலங்கார தீபாராதனையும், அம்பாள் வீதி உலா வருதலும் நடைபெறுகிறது.

பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நேற்று காலையில் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், மகாசங்கல்பம், கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், ருத்ர ஹோமம், துர்கா ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டது.

இதைத்தொடர்ந்து கும்ப அலங்காரம் நடந்தது. இரவில் முதல் கால யாகசாலை பூஜையும், சிறப்பு பூர்ணாகுதி தீபாராதனையும் நடந்தது. இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜை, மாலை 5 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜை, இரவு 11 மணிக்கு யந்திர ஸ்தாபனமும், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகியவை நடக்கின்றது. நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜை, 4.30 மணிக்கு மூர்த்திகளுக்கு ரக்‌ஷா பந்தனம், நாடி சந்தானம், மஹா பூர்ணாகுதி தீபாராதனை நடக்கிறது.

காலை 6 மணி முதல் 7.15 மணிக்குள் விமானம், ஆயிரத்தம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து காலை 10 மணிக்கு மகா அபிஷேகம், 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, மகேஸ்வர பூஜை, பகல் 12.30 மணிக்கு ராஜகோபால சுவாமி கோவில் திடலில் அன்னதானம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், இரவு 7 மணிக்கு அம்பாள் வீதி உலா வருதலும் நடைபெறுகிறது.

Tags:    

Similar News