வழிபாடு

ஸ்ரீநடராஜரும், சிவகாமி அம்மனும் சமேதரராக பக்தர்களுக்கு எழுந்தருளிய காட்சி.

பேரூர் பட்டீசுவரர் கோவிலில் கனகசபை மண்டபத்தில் எழுந்தருளிய நடராஜர், சிவகாமியம்மன்

Published On 2023-04-06 05:38 GMT   |   Update On 2023-04-06 05:38 GMT
  • ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
  • இரவு கொடியிறக்கத்துடன் விழா முடிவுற்றது.

கோவையை அடுத்த பேரூரில் பிரசித்திபெற்ற பட்டீசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நடைபெற்றது. விழாவின் கடைசி நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

பட்டீசுவரர், பச்சைநாயகி அம்மன், நடராஜர், சிவகாமி அம்மன், சோமாஸ்கந்தர் மற்றும் அனைத்து மூர்த்திகளுக்கும் அபிஷேக பூஜைகள் நடந்தது. 4.30 மணிக்கு ஸ்ரீ நடராஜர், சிவகாமி அதிமூர்க்கம் மன், கோமுனி, பட்டிமுனி ஆகிய மூர்த்திகளுக்கு 16 வகையான திரவியங்களுடன் அபிஷேகம் செய்யப்பட்டது. பஞ்ச கலா ஸ்நபன கலச அபிஷேகம் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து 7.30 மணிக்கு ஸ்ரீ நடராஜர் சிவகாமி அம்மன் தங்க கவச விசேஷ புஷ்ப மாலைகள் அலங்காரத்துடன் அதி மூர்க்கம்மன், கோமுனி, பட்டிமுனி ஆகிய மூர்த்திகளுக்கு, பங்குனி உத்திர ஆனந்த தாண்டவ தரிசன காட்சி அருளினர்.

காலை 9 மணிக்கு நடராஜர் வெள்ளி சப்பரத்திலும், சிவகாமியம் மன் தங்க சப்பரத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர். பின்னர் நடராஜ பெருமானின் ஆனந்த தாண்டவ நிகழ்ச்சி நடந்தது. இதில் சிவகாமி அம்மன் நடராஜப் பெருமானின் மேல் கோபம் கொண்டு, சொர்க்கவாசல் வழியாக கோவிலுக்கு வந்து நடை அடைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதையடுத்து, சுந்தரமூர்த்தி நாயனார் தூது சென்று சிவகாமி அம்பாளை சமாதானம் செய்து, நடராஜரிடம் இருந்து மாலையை சுந்தரமூர்த்திநாயனார் மூலம் சிவகாமியம்மன் ஏற்றுக்கொண்டார்.

பின்னர் பேரூர் பட்டீசுவரர் கோவிலில் உள்ள கனகசபை மண்ட பத்தில் ஸ்ரீ நடராஜரும், சிவகாமி அம்மனும் எழுந்தருளி பக்தர்க ளுக்கு பங்குனி உத்திர தரிசன காட்சி அளித்தனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு கொடியிறக்கத்துடன் விழா முடிவுற்றது.

Similar News