வழிபாடு

பயணம் செண்பகவல்லி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது

Published On 2023-03-02 06:52 GMT   |   Update On 2023-03-02 06:52 GMT
  • கும்பாபிஷேக விழா நாளை தொடங்கி 7-ந்தேதி வரை நடக்கிறது.
  • 7-ந்தேதி அம்மனுக்கு பொங்கலிடும் நிகழ்ச்சி நடக்கிறது.

உண்ணாமலைக்கடையை அடுத்த பயணம் பகுதியில் செண்பகவல்லி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி 7-ந்தேதி வரை நடக்கிறது.

விழாவின் முதல் நாள் நாளை அதிகாலை காலை 4.30 மணிக்கு பள்ளி உணர்த்தல், கணபதிஹோமம், சிவபுராணம், அபிராமி அந்தாதி பாராயணம், பூஜைகள், தீபாராதனை, பீடபூஜை, காலை 7.45 மணி அஷ்டபந்தன பிரதிட்சை, 8.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. நிகழ்ச்சியில் மார்த்தாண்டம் அனஸ்வரா பவுண்டேஷன் சுவாமிஜி ஸ்ரீ சுரதாவனம் முருகதாஸ், திருநல்லை 39-வது குருமகா சன்னிதான ஆதினம் ஸ்ரீமத் சுவாமி ராகவாசந்தஜி மகராஜ் ஆகியோர் ஆசியுரை வழங்குகின்றனர்.

நிகழ்ச்சியில் உண்ணாமலைக்கடை பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜெயசீலன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் தர்மராஜ், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத், பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் சமய துறவிகள், ஆன்மிக பெரியோர்கள், அரசியல் பிரமுகர்கள், ஆலய நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள். தொடர்ந்து பகல் 11.45 மணிக்கு உச்சகால பூஜை, அன்னதானம், மாலை 6.15 மணிக்கு திருவிளக்கு பூஜை, அம்மனுக்கு பிடிப்பணம் சமர்ப்பித்தல், பகவதி பூஜை, விஷ்வா காளீஸ்வரன் என்னும் நாடகம் ஆகியவை நடைபெறுகிறது.

விழாவில் நாளைமறுநாள்(சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு பண்பாட்டு போட்டிகள், மாலை 5 மணிக்கு வினாடி வினா போட்டி, டான்ஸ் ஸ்டார் ஷோ, 5-ந்தேதி காலை 10 மணிக்கு சுமங்கலி பூஜை, மாலை 4 மணிக்கு புனிதநீர் கும்ப பவனி சிங்காரி மேளம், தாலப்பொலி, செண்டை மேளம், முழங்க அம்மன் பவனி வருதல் நிகழ்ச்சி, 6-ந்தேதி காலை 7.30 மணிக்கு அபிஷேகங்கள், இரவு 7 மணிக்கு இந்து சமய மாநாடு, பரிசளிப்பு விழா, இரவு 10 மணிக்கு கலை நிகழ்ச்சி, நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை ஆகியவை நடக்கிறது.

விழாவின் இறுதிநாளான 7-ந்தேதி காலை 11 மணிக்கு அம்மனுக்கு பொங்கலிடும் நிகழ்ச்சி, மதியம் 12 மணிக்கு பூப்படைப்பு, தீபாராதனை, தொடர்ந்து அன்னதானம் ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News