விழுந்தயம்பலம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது
- இந்த விழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
- தினமும் ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது.
விழுந்தயம்பலம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முதல்நாளான இன்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, தொடர்ந்து வெட்டுமணி திருத்தல அதிபர் அந்தோணிமுத்து தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் மரிய மார்ட்டின் மறையுரையாற்றுகிறார். விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.30 மணிக்கு திருப்பலி ஆகியவை நடக்கிறது.
விழாவின் 21-ந்தேதி காலை 10 மணிக்கு அன்னை நகர் அருட்பணியாளர் அருள்தேவதாசன் தலைமை தாங்கி முதல் திருவிருந்து மற்றும் திருமுழுக்கு திருப்பலியை நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் பெர்டின் அனஸ் மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு அன்பு விருந்து, 22-ந்தேதி காலை 10 மணிக்கு சாமியார்மடம் அருட்பணியாளர் ஆல்பர்ட் தலைமை தாங்கி திருவிழா திருப்பலியை நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் ரோமேரிக் ததேயு மறையுரையாற்றுகிறார்.
தொடர்ந்து கொடியிறக்கம், பகல் 11.30 மணிக்கு அன்பு விருந்து, மாலை 6.30 மணிக்கு கலைநிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை தலைமையில் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.