திருப்பரங்குன்றம் கோவிலில் நவராத்திரி திருவிழா 26-ந்தேதி தொடங்குகிறது
- திருவிழா வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. 4-ந்தேதி வரை நடக்கிறது.
- 5-ந்தேதி தெய்வானையுடன் முருகப்பெருமான் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் நவராத்திரி திருவிழா வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. 4-ந்தேதி வரை நடக்கிறது. திருவிழாவை யொட்டி கோவர்த்தனாம்பிக்கைக்கு தினமும் ஒரு அலங்காரம் செய்யப்படுகிறது.
திருவிழாவின் முதல் நாளான 26-ந்தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரம் 27-ந்தேதி நக்கீரருக்கு காட்சி கொடுத்தல், அலங்காரம், 28-ந்தேதிஊஞ்சல் அலங்காரம், 29-ந்தேதி பட்டாபிஷேகம் அலங்காரம், 30-ந்தேதி திருக்கல்யாணம் அலங்காரம் ,அக்டோபர் 1-ந்தேதி தபசுக்காட்சி அலங்காரம், 2-ந்தேதி மகிஷாசூரமர்த்தினி அலங்காரம், 3-ந்தேதி சிவபூஜை அலங்காரம், 4-ந்தேதி சரஸ்வதி பூஜை நடக்கிறது திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக 5-ந்தேதி மாலை பசுமலையில் உள்ள அம்பு போடும் மண்டபத்தில தெய்வானையுடன் முருகப்பெருமான் தங்க குதிரையில் எழுந்தருளி எட்டுதிக்குமாக அம்பு எய்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
கோவிலுக்குள் கம்பத்துடி மண்டப வளாகத்தில் நவராத்திரியையொட்டி கொலு பொம்மைகள் போல சுவாமி எழுந்தருள கூடிய அனைத்து வாகனங்களும் ஒரே இடத்தில் வைக்கப்படுவது தனிசிறப்பாகும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.