வழிபாடு

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு தங்க பாதம் நன்கொடை

Published On 2022-09-12 13:59 IST   |   Update On 2022-09-12 13:59:00 IST
  • தங்க பாதம் 85 கிராம் எடை கொண்டது.
  • இந்த பாதங்களின் மதிப்பு ரூ.4 லட்சமாகும்.

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலுக்கு ஐதராபாத்தை சேர்ந்த சத்யநாராயணா என்ற பக்தர் தங்க பாதங்களை காணிக்கையாக வழங்கினார்.

கோவிலில் நடைபெறும் கல்யாண உற்சவத்தின்போது உற்சவமூர்த்தி வெங்கடேஸ்வர சாமி அலங்காரத்திற்கு இந்த பாதங்கள் வழங்கப்பட்டன. 85 கிராம் எடை கொண்ட இந்த பாதங்களின் மதிப்பு ரூ.4 லட்சம் என பக்தர் கூறினார்.

Tags:    

Similar News