கால்பந்து
5 உலக கோப்பைகளில் கோல் அடித்து ரொனால்டோ புதிய சாதனை
- கானாவுடனான ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
- நட்சத்திர வீரர் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார்.
தோகா:
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற குரூப் எச் பிரிவு லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல், கானா அணிகள் மோதின.
முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் 0-0 என சமனில் இருந்தது.
இறுதியில், கானாவுக்கு எதிரான போட்டியில், 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில், போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ 65-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
இந்நிலையில், 5 உலக கோப்பைகளில் (2006, 2010, 2014, 2018, 2022) கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.