கால்பந்து

கோல் அடித்த மகிழ்ச்சியை கொண்டாடிய வீரர்கள்

உலக கோப்பை கால்பந்து - கத்தார் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது ஈகுவடார்

Published On 2022-11-20 18:07 GMT   |   Update On 2022-11-22 12:18 GMT
  • உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று கோலாகலமாகத் தொடங்கியது.
  • முதல் போட்டியில் கத்தார்- ஈகுவடார் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

தோகா:

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 18-ந்தேதி வரை நடக்கிறது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலக கோப்பை போட்டியான இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

இந்நிலையில், இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு நடந்த தொடக்க ஆட்டத்தில் கத்தார், ஈகுவடார் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

ஆட்டம் தொடங்கிய 16-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் ஈகுவடார் அணியின் வேலன்சியா கோல் அடித்தார். தொடர்ந்து, 31-வது நிமிடத்தில் 2வது கோலையும் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதியில் ஈகுவடார் அணி 2-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

இறுதியில், ஈகுவடார் அணி 2-0 என்ற கோல் கணக்கில் கத்தார் அணியை தோற்கடித்து முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

Tags:    

Similar News