கால்பந்து

கோல் அடித்த மகிழ்ச்சியில் ரொனால்டோ

உலக கோப்பை கால்பந்து: 3-2 என்ற கோல் கணக்கில் கானாவை வீழ்த்தியது போர்ச்சுகல்

Published On 2022-11-24 18:01 GMT   |   Update On 2022-11-24 18:01 GMT
  • முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
  • ஆட்ட நேர இறுதியில் போர்ச்சுகல் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

தோகா:

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற குரூப் எச் பிரிவு லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல், கானா அணிகள் மோதின.

முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் 0-0 என சமனில் இருந்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் 65-வது நிமிடத்தில் போர்ச்சுகலின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனல்டோ கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார்.

அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 73-வது நிமிடத்தில் கானா அணியின் ஆண்ட்ரூ ஆயு ஒரு கோல் அடித்தார்.

போர்ச்சுக்கல் அணியின் ஜோ பெலிக்ஸ் 78-வது நிமிடத்திலும், 80-வது நிமிடத்தில் ரபேல் லியோவும் தலா ஒரு கோல் அடித்தனர்.

கானா அணியின் ஓஸ்மான் புகாரி 89-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

ஆட்டநேர முடிவில் போர்ச்சுகல் 3-2 என்ற கோல் கணக்கில் கானா அணியை வீழ்த்தி வெற்றியைப் பதிவுசெய்தது.

Tags:    

Similar News