கால்பந்து

டென்மார்க் - துனிசியா வீரர்கள்

உலகக்கோப்பை கால்பந்து: டென்மார்க் - துனிசியா போட்டி சமனில் முடிந்தது

Published On 2022-11-22 15:36 GMT   |   Update On 2022-11-22 15:36 GMT
  • முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
  • 2வது பாதியிலும் இரு அணிகளால் கோல் அடிக்க முடியவில்லை.

தோகா:

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் டென்மார்க் - துனிசியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையாக போராடினர்.

முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனை தொடர்ந்து நடந்த 2வது பாதி ஆட்டத்திலும் கோல் எதுவும் அடிக்கப்படாதால், ஆட்டம் சமனில் முடிந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.

Tags:    

Similar News