சமையல்

உங்களுக்கான சமையல் டிப்ஸ் இதோ... ட்ரை பண்ணி பாருங்க...

Published On 2025-01-16 14:37 IST   |   Update On 2025-01-16 14:37:00 IST
  • எலுமிச்சம் பழத்தை உப்பு ஜாடிக்குள் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு அழுகிப்போகாமல் இருக்கும்.
  • கீரை சமைக்கும் போது சிறிதளவு எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் கீரையின் நிறம் மாறாது.

* தினமும் குடிக்கும் டீயில் இஞ்சி, ஏலக்காய் மற்றும் புதினா இலைகளை சேர்த்தால் ருசியாக இருக்கும். உடலுக்கும் நன்மை பயக்கும்.

* ஆம்லெட் செய்யும் போது கொஞ்சம் வெங்காயத்துடன் தக்காளி சேர்த்தால் முட்டை வாசனை வராது. ருசியும் கூடும்.

* புதினா, மல்லி மற்றும் கறிவேப்பிலைகளை தண்டுடன் அப்படியே வைக்கக்கூடாது. நன்கு கழுவி மின் விசிறியில் காயவைத்த பின் இலைகளை மட்டும் கிள்ளி ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து பிரிட்ஜில் வைத்தால் போதும். ஒரு வாரம் வரை பிரெஷ்ஷாக இருக்கும்.

* பாகற்காய் துண்டுகளை உப்பு சேர்த்து பிசிறி பத்து நிமிடம் கழித்து தண்ணீரில் அலசி விட்டு சமைத்தால் அவ்வளவாக கசக்காது.

* கூட்டு, பொரியலுக்கு தேங்காய் துருவலுக்கு மாற்றாக புழுங்கல் அரிசியை பொரித்து பொடி செய்து தூவி இறக்கினால் போதும். தேங்காய் சேர்த்த சுவை கிடைக்கும்.

* கத்தரிக்காய் எண்ணெய் குழம்பு சமைக்கும் போது ஒரு ஸ்பூன் கெட்டித்தயிரை கலந்தால் கத்தரிக்காய் கறுப்பாகாமல் இருக்கும்.

* எலுமிச்சம் பழத்தை உப்பு ஜாடிக்குள் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு அழுகிப்போகாமல் இருக்கும்.

* ரவா தோசை செய்யும் போது 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு சேர்த்தால் தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென இருக்கும்.

* கீரை சமைக்கும் போது சிறிதளவு எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் கீரையின் நிறம் மாறாது.

* பருப்பு வேகவைக்கும் போது நெய் சேர்த்து சமைத்தால் சாம்பார் ருசியாக இருக்கும்.

* வீட்டில் எறும்பு நடமாட்டம் இருந்தால் அங்கு கொஞ்சம் பெருங்காயத்தூளை தூவி விட்டால் எறும்புத்தொல்லை இருக்காது.

* சாதம் வடிக்கும்போது குழைந்து விட்டால் உடனே சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து இறக்கினால் அதிகம் குழையாமல் இருக்கும்.

* கேழ்வரகை ஊறவைத்து அரைத்து பால் எடுத்து அல்வா போன்று செய்யலாம். அதிக ருசியும், ஆரோக்கியமும் கிடைக்கும்.

Tags:    

Similar News