சமையல்

செட்டிநாடு ஸ்டைல் காளான் தொக்கு!

Published On 2024-11-10 07:47 GMT   |   Update On 2024-11-10 07:47 GMT
  • சைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று.
  • அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.

சைவ பிரியர்கள் பலரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் காளானும் ஒன்று. காளான் வைத்து சுவையான காளான் மசாலா, கிரேவி, காளான் 65, காளான் மஞ்சூரியன் என்று பல விதங்களில் சமைத்து சாப்பிடலாம். அந்த வகையில் இன்று நாம் சூப்பரான செட்டிநாடு ஸ்டைல் காளான் தொக்கு ரெசிபியை பார்க்கலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

காளான்- 100 கிராம்

பெரிய வெங்காயம் -1

தக்காளி- 1

உப்பு தேவைக்கேற்ப

வறுத்து அரைக்க:

தனியா - 2 தேக்கரண்டி

மிளகு -1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

பெருஞ்சீரகம்- 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்-1

பூண்டு - ஒரு பல்

தாளிக்க:

எண்ணெய்- 2 தேக்கரண்டி

பட்டை - 1 (சிறியது)

லவங்கம் -2


செய்முறை:

முதலில் காளானை நீளமாகவும், வெங்காயம் மற்றும் தக்காளியை பொடிப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். பின்னர். வறுக்க வேண்டிய பொருட்களை எண்ணெய் சேர்க்காமல் வாசம் வரும் வரை வறுத்து, சூடு ஆறியவுடன் மிக்சி ஜாரில் போட்டு கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, பட்டை, லவங்கம் போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதக்கவும். அத்துடன் நறுக்கிய காளானைப் போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்கு வேக விடவும். பின்னர் வறுத்து அரைத்த கலவையைப்போட்டு 3 நிமிடங்கள் வேக விட்டு இறக்கினால் சுவையான காளான் தொக்கு ரெடி. இது சூடான சாதத்துக்கும் சப்பாத்திக்கும் ஏற்றது.



Tags:    

Similar News