அழகுக் குறிப்புகள்
null

அழகா... டிரெண்டிங்கா.. உடைகளை தேர்ந்தெடுக்கலாம் வாங்க..

Published On 2024-08-31 07:05 GMT   |   Update On 2024-08-31 09:24 GMT
  • கருப்பு, மெரூன், பச்சை போன்ற அடர்ந்த நிறங்களில் தேர்வு செய்யும்போது நேர்த்தியான தோற்றம் கிடைக்கும்.
  • நன்றாக கஞ்சி போட்டு சலவை செய்த காட்டன், ஜார்ஜெட் புடவைகள் அணியலாம்.

பெண்கள் வீடுகளில் தேவதைகளாக ஜொலித்தாலும் அலுவலகம் செல்லும்போது உடை விஷயத்தில் மிகவும் கவனமாகவும், அதே சமயம் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்காமலும் இருக்க வேண்டியுள்ளது. ஒரு நூல் இடைவெளி மீறினாலும் நம் மீதுள்ள கண்ணியம், மரியாதையை பிறர் எடைபோடக்கூடும். எனவே அழகாக, டிரெண்டிங்காக இருப்பது மட்டுமின்றி வெளியிடங்களில் மரியாதை கிடைக்கும் வகையில் உடைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அலுவலகம் செல்லும் பெண்கள் புடவை, சுடிதார், பேண்ட், பார்மல் சட்டை, ஸ்கர்ட் போன்றவற்றை அணிந்து செல்லலாம். சில அலுவலகங்களில் மேற்கத்திய உடைகளை தங்கள் ஊழியர்கள் அணிவதை விரும்புவார்கள். சில நிர்வாகங்கள் பாரம்பரிய உடைகள்தான் உடுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கும். எனவே அலுவலகம் செல்லும் பெண்கள் தங்கள் வீட்டு அலமாரியில் வைத்திருக்க வேண்டிய சில உடைகள்...

அழகிய டாப், நீண்ட பிளவுஸ்

அணியும் லெக்கின் அல்லது ஜீன்சுக்கு ஏற்ப லாங் அல்லது ஷார்ட் டைப் டாப்களை அணியலாம். அவரவர் விருப்பத்துக்கேற்ப துப்பட்டா அணியலாம். ஆனால் ஒருசில டாப்களுக்கு எப்படி அணிந்தாலும் துப்பட்டா பொருந்தாது. பாட்டமுக்கு தகுந்தாற் போல் மொராக்கன் டாப், டியுனிக், குர்த்திகள் என விதவிதமான டாப்களை அணியலாம். காலர் டைப் குர்த்திகள் பலரின் சாய்ஸாக உள்ளது; அணியும் போது பர்ப்பெக்ட் லுக் கொடுக்கும். கருப்பு, மெரூன், பச்சை போன்ற அடர்ந்த நிறங்களில் தேர்வு செய்யும்போது நேர்த்தியான தோற்றம் கிடைக்கும்.

முக்கியமான மீட்டிங் போன்ற நேரங்களில் பட்டனுடன் கூடிய சட்டைகளை தேர்வு செய்யலாம். உயர் அதிகாரிகள் வரும் மீட்டிங், இன்டர்வியூ போன்ற இடங்களுக்கு அடர் நிற கீழ் ஆடையுடன் (பாட்டம்), வெளிர் நிற பட்டன் சட்டையை முயற்சித்து பாருங்கள். கருப்பு, பிரவுன் மற்றும் அடர் நீல நிற பேண்டுகளுக்கு வெள்ளை, நீலம், பீச் நிறங்களில் சட்டைகள் அணியலாம். ஆனால், உடலை இறுக்கிப் பிடிக்கும்படி அணியக்கூடாது. சட்டைகள் அணியும்போது கழுத்தை சுற்றி ஸ்கார்ப் அணியலாம் அல்லது வெயிஸ்ட்கோட் அணிந்தால் பார்க்க நேர்த்தியாக இருக்கும்.

காட்டன் புடவைகள்

நன்றாக கஞ்சி போட்டு சலவை செய்த காட்டன், ஜார்ஜெட் புடவைகள் அணியலாம். இதற்கு பிளவுஸ் சாதாரணமாக இருக்கவேண்டும். அதிக ஜிமிக்கி, எம்பிராய்டரி வேலைப்பாடு, முதுகில் ஜன்னல், கதவு போன்றவை இருக்கக்கூடாது. அதேபோல் டீப்நெக் மற்றும் ஸ்லீவ்லெஸ் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். புடவைகளை 'பிளீட்' எடுத்து பின் குத்தினால் 'ரிச்' லுக் கிடைக்கும்.

பிளேஸர்

அலுவலகத்தில் ஸ்டைலான, மிடுக்கான தோற்றத்தை பிளேஸர்கள் அளிக்கின்றன. இப்போது பலரின் விருப்பமும் இதுதான். ஷார்ட் மற்றும் லாங் டைப் ஸ்கர்ட், பேன்ட் போன்றவைக்கு பிளேஸர் பர்பெக்ட்டாக பொருந்தும். பிளேஸருக்கு பொருத்தமான அதே நிறத்தில் பேண்ட்களும் கிடைக்கின்றன. மீட்டிங்கில் பிளேஸர் அணிந்தால் கிடைக்கும் 'லுக்கே' தனிதான்.

Tags:    

Similar News