அழகுக் குறிப்புகள்
null

முகம் வறட்சி நீங்கி மென்மையாக்க உதவும் ஃபேஸ் பேக்

Published On 2024-11-07 09:25 GMT   |   Update On 2024-11-08 08:51 GMT
  • கிரீன் டீ ஸ்கிரப் மிகவும் உதவியாக இருக்கும்.
  • காபி தூள் இறந்த செல்களை அகற்றி முகத்துக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.

நாம் எப்பொழுதும் நம்முடைய முகம் அடுத்தவர்கள் விரும்பும்படி அழகாக இருக்க வேண்டும் என்று முகத்தை அழகாக வைத்துக் கொள்வதற்கு பல முயற்சிகளை எடுத்துக் கொண்டு இருக்கிறோம்.

சிலருக்கு என்னதான் முகம் வெள்ளையாகவும், அழகாகவும் இருந்தாலும் அவர்களுக்கு முகம் எப்பொழுதும் வறட்சியாக காணப்படும். மேலும் வெயிலினால் அவர்களுக்கு வியர்வை வடியும் பொழுதும் முகம் பார்ப்பதற்கு சோர்வாகவும், பொலிவில்லாமலும் தோற்றமளிக்கும்.

இதனால் முகங்களில் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதை போக்குவதற்கு சிலர் அழகு சாதன கிரீம்களை பயன்படுத்துவார்கள்.

ஆனால் நாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிதில் இதனை சரி செய்து விடலாம். முகம் வறட்சியாக இருந்தால் அதை எப்படி சரி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.


பாதம்

பாதாம் வைத்து உங்கள் முகத்தை நீங்க ஸ்கிரப் செய்து வந்தால் உங்கள் முகம் எப்போதும் ஈரப்பதமாக இருக்கும்.

முதலில் ஒரு கப் பாதாம் பவுடரில், அரை கப் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்று கலந்து பின் ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள்.

இந்த பேஸ்ட் நன்றாக உலர்ந்து காய்ந்தவுடன் குளிர்ந்த நீரால் முகத்தை நன்றாக கழுவி எடுத்தால் முகம் ஈரப்பதத்துடன் மென்மையாக காட்சியளிக்கும்.


கீரின் டீ

வறட்சியான சருமத்திற்கு கிரீன் டீ ஸ்கிரப் மிகவும் உதவியாக இருக்கும். ஒரு பவுளில் கிரீன் டீ சேர்த்து அதனுடன் ஒரு டீஸ்பூன் சர்க்கரையும் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். இதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ளவும்.

பின்னர் இந்த கிரீன் டீ பேஸ்ட்டை நம் முகத்தில் நன்றாக தேய்த்து சிறிது நேரத்திற்கு பிறகு பேஸ்ட் உலர்ந்த பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். கிரீன் டீ ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள கிருமிகளை அழித்து பல நன்மைகளை உண்டாக்கும்.


தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயை முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகத்தில் உள்ள வறட்சி நீங்கி மென்மையான மற்றும் பொலிவான சருமத்தை நமக்கு தருகிறது.

இதை செய்வதற்கு அரை கப் தேங்காய் எண்ணெய் எடுத்து இரண்டு டீஸ்பூன் அளவு சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும், பின் இதில் ஒரு டீஸ்பூன் எலும்பிச்சை பழச்சாறையும் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து ஸ்கிரப் உலர்ந்தவுடன் தண்ணீரால் முகத்தை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.


காபி பவுடர்

காபி பவுடர் வைத்து முகத்தை ஸ்கிரப் செய்யும் போது முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி முகத்துக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. ஒரு டீஸ்பூன் அளவு காபி பவுடரை ஒரு டீஸ்பூன் அளவு தண்ணீரில் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும்.

பின்னர் இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து நம் முகத்தில் ஃபேஸ் மாஸ்க் போல் அப்ளை செய்து 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவி எடுத்துக் கொள்ளலாம்.

Tags:    

Similar News