அழகுக் குறிப்புகள்

கருவளையத்தை நீக்க உதவும் வீட்டு வைத்திய குறிப்புகள்!

Published On 2025-02-05 14:19 IST   |   Update On 2025-02-05 14:19:00 IST
  • உருளைக்கிழங்கு சாறு கருவளையங்களை நீக்கவும் உதவும்.
  • ரோஸ் வாட்டர் கருவளையங்களை நீக்க பெரிதும் உதவுகிறது.

டார்க் சர்க்கிள் பிரச்சனை தற்போதுள்ள நாட்களில் சர்வ சாதாரணமாகிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் திரையின் முன் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பது, தூக்கமின்மை போன்றவை. இது தவிர, பல காரணங்களால் கருவளையம் பிரச்சனை தொடங்குகிறது. உண்மையில், மக்கள் கருவளையங்களை மறைக்க பல மருந்துகளை பயன்படுத்துகின்றனர்.

கன்சீலர் முதல் மேக்கப் வரை, இந்த விஷயங்கள் உங்கள் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களை மறைக்க உதவினாலும், அது நிரந்தரமான சிகிச்சையல்ல. வீட்டில் உள்ள சில பொருட்களை கொண்டே கருவளையத்தை அகற்றலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.? ஆம். அந்த பொருட்கள் என்னவென்று இங்கே விரிவாக காண்போம்.

கருவளையம் ஏற்பட காரணம்:

* போதுமான தூக்கமின்மை

* தவறான உணவுப் பழக்கம்

* ஒழுங்கற்ற வழக்கம்

* இரவில் தாமதமாக திரைகளைப் பார்ப்பது

* சோர்வு

* மன அழுத்தம்

* உலர் கண்கள்

* கண் ஒவ்வாமை

* நீரிழப்பு

* உடலில் நீர் பற்றாக்குறை

* சூரிய ஒளி மற்றும் மாசுபாடு போன்றவற்றின் நீண்டகால வெளிப்பாடு


ரோஸ் வாட்டர் மற்றும் பால்:

பால் மற்றும் ரோஸ் வாட்டர் கருவளையங்களை நீக்க பெரிதும் உதவுகிறது. இதற்கு ரோஸ் வாட்டர் மற்றும் பால் ஆகியவற்றை சம அளவு எடுத்து பருத்தி பஞ்சின் உதவியுடன் கருவளையங்கள் உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் வைக்கவும். அதன் பிறகு காட்டன் பேடை அகற்றி, பின்னர் தண்ணீரில் முகத்தை கழுவவும்.


தேன், பால் மற்றும் எலுமிச்சை:

தேன், பால் மற்றும் எலுமிச்சை ஆகியவை கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதற்கு ஒரு ஸ்பூன் பாலில் அரை ஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கண்களைச் சுற்றி மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் கருவளையங்களை போக்கலாம்.


உருளைக்கிழங்கு சாறு:

உருளைக்கிழங்கு சாறு கருவளையங்களை நீக்கவும் உதவும். இதற்கு முதலில் உருளைக்கிழங்கை அரைக்கவும். அதன்பிறகு, அதன்சாறு எடுத்து, பஞ்சில் தோய்த்து கண்களை சுற்றி தடவி சிறிது நேரம் விட்டு விடுங்கள். அதன் பிறகு கண்களை சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். இப்படி சில நாட்கள் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


தக்காளி

தக்காளி ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களை நீக்க, முதலில் 2 ஸ்பூன் தக்காளி சாற்றில் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட்டை உருவாக்க வேண்டும். இப்போது இந்த பேஸ்ட்டை கண்களின் கீழ் 10 நிமிடங்கள் தடவவும். அதன் பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவவும். இவ்வாறு செய்வதன் மூலம் கருவளையம் பிரச்சனை நீங்கும்.


வெள்ளரிக்காய்

இதற்கு முதலில் வெள்ளரிக்காயை துண்டுகளாக நறுக்க வேண்டும். அதன் பிறகு, 10 நிமிடங்கள் கண்களில் வைத்திருக்க வேண்டும். இதனால் கருவளையம் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

Tags:    

Similar News