அழகுக் குறிப்புகள்
null

கரும்புள்ளிகள் நீங்கி முகம் பொலிவு பெற வேப்பிலை ஃபேஷியல்

Published On 2023-08-23 08:55 GMT   |   Update On 2023-08-24 09:10 GMT
  • பேசியல் செய்வதற்கு முதலில் பேஸ் டீம் செய்ய வேண்டும்.
  • அடுத்ததாக செய்யக் கூடியதுதான் பேஸ் ஸ்க்ரப்.

நமது சருமம் தான், நமது சிறந்த நண்பன், கருப்போ, சிவப்போ இல்லை மாநிறமோ, நம் சருமத்தை முதலில் நாம் நேசிக்க வேண்டும். தோல் நிறம் எதுவாக இருந்தாலும், அதன் அமைப்புதான் முக்கியம். தெளிவான, பளபளப்பான மற்றும் கருமை இல்லாத சருமத்தை யார்தான் விரும்பவில்லை?

வேப்பிலை ஃபேஷியல் முகத்திற்கு அழகு கூட்டுவது மட்டுமல்லாமல் முகத்தில் உள்ள கிருமிகளையும், கரும்புள்ளிகளையும், முகப்பருக்களையும் நீக்குவதற்கு பயன்படுகிறது. அதை எவ்வாறு செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம். பேசியல் செய்வதற்கு முதலில் பேஸ் டீம் செய்வார்கள். இதற்கு நாம் உபயோகிக்கக்கூடிய பொருள்தான்

எலுமிச்சம் பழத்தோலை கேரட் உரசுவது போல் உரசி ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு

அகலமான பாத்திரத்தில் போட்டு அதில் 300 மில்லி அளவு சூடான தண்ணீரை ஊற்ற வேண்டும். பிறகு அதை நன்றாக கலக்கி, அதில் வரும் ஆவியில் நம்முடைய முகத்தை ஐந்து நிமிடம் காட்ட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் எலுமிச்சை பல தோளில் இருக்கக்கூடிய கிருமி நாசினி ஆனது நம் முகத்தில் இருக்கக்கூடிய துவாரங்களை திறந்து அதில் இருக்கும் கிருமிகளையும், அழுக்குகளையும் நீக்க உதவுகிறது.

அடுத்ததாக செய்யக் கூடியதுதான் பேஸ் ஸ்க்ரப். இதற்கு நாம் முதலில் ஒரு சோற்றுக்கற்றாழையை எடுத்து சுத்தம் செய்து அதில் இருக்கும் சதைப்பகுதியை மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து ஒரு பவுலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு பவுலை எடுத்து அதில் 2 ஸ்பூன் அளவு அரிசி மாவை சேர்க்க வேண்டும். மேலும் அதனுடன் அரை எலுமிச்சம் பழச்சாறை சேர்க்க வேண்டும். பிறகு தேவையான அளவு சோற்றுக்கற்றாழை ஜூசை ஊற்றி பேஸ்ட் போல தயார் செய்து கொள்ள வேண்டும்.

இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, முகத்தை ஐந்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு முகத்தை கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நம் முகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான இறந்த செல்களும் நீக்கப்படும். கடைசியாக நாம் செய்யப்போவது தான் ஃபேஸ் பேக்.

இந்த ஃபேஸ் பேக்கிற்கு நமக்கு வேப்பிலை பொடி தேவைப்படும். ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் வேப்பிலை பொடியை போட்டு, அதனுடன் நாம் அரைத்து வைத்திருக்கும் கற்றாழை ஜூசை ஊற்றி பேஸ்ட் போல தயார் செய்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகத்தில் நன்றாக தடவி விட வேண்டும். இந்த ஃபேஸ் பேக் நன்றாக காய்ந்த பிறகு, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடலாம்.

இவ்வாறு செய்வதன் மூலம் நம் முகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கிருமிகளும் நீங்குவதோடு, கரும்புள்ளிகளும் அகன்று, முகம் பொலிவுடன் காணப்படும். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த இயற்கையான பொருட்களை வைத்து எந்தவித செலவு செய்யாமல் வீட்டிலேயே பேஷியல் செய்து பயனடைவோம்.

Tags:    

Similar News