செய்திகள்
குமரி அனந்தனை விடுவிக்காவிட்டால் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர் எச்சரிக்கை
குமரி அனந்தனை விடுதலை செய்யாவிட்டால் நாளை தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வழக்கம் போல மக்களின் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காணாமல் செயல்பட்டு வரும் பா.ஜ.க.வின் பினாமி தமிழக அரசு குமரிஅனந்தனின் கோரிக்கையை ஏற்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இது மிகுந்த கண்டனத்திற்குரியது.
தனது கோரிக்கையை வற்புறுத்தி ஏற்கனவே அறிவித்தபடி இலக்கிய செல்வர் குமரி அனந்தன் சாகும் வரை உண்ணாவிரத அறப்போராட்டத்தை தொடங்கினார். அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குமரி அனந்தன் கைது செய்யப்பட்டதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
எந்த வழக்குமின்றி குமரி அனந்தனை உடனடியாக விடுதலை செய்யுமாறு தமிழக முதல்-அமைச்சரையும், காவல்துறை அதிகாரிகளையும் கேட்டுக் கொள்கிறேன். அவரை விடுதலை செய்யாவிட்டால் நாளை காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.