இந்தியா
நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் உயிரிழப்பு
- சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
- பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தின் மொகாலியில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த 20 வயது பெண் உள்பட இருவர் உயிரிழந்தனர். மேலும், பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
குறைந்தபட்சம் நான்கு பேர் இடிபாடுகளுக்குள் 17 மணி நேரத்திற்கும் மேல் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இணைந்து மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை இடிபாடுகளில் இருந்து 60 சதவீத குப்பைகள் அகற்றப்பட்டதாக மீட்பு பணிகளை மேற்கொள்ளும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.