இந்தியா

தேர்வுக்கு பயந்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவர்கள்- போலீஸ் விசாரணையில் அம்பலம்

Published On 2024-12-22 08:17 GMT   |   Update On 2024-12-22 08:17 GMT
  • சிறுவர்கள் என்பதால் அறிவுரை வழங்கி அனுப்பியதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
  • மாணவனின் பெற்றோரிடம் அவரது நடவடிக்கை குறித்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தி இருந்தனர்.

புதுடெல்லி:

கடந்த 13 மற்றும் 17 தேதிகளில் டெல்லியில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. 13-ந்தேதி மட்டுமே 30 பள்ளிகளுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில்கள் வந்தன.

டெல்லி ரோகினி பகுதியில் கடந்த வாரம் இ-மெயிலில் 2 பள்ளிகளுக்கு வெடுகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சிறப்பு படை போலீசார் இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணயில் அந்தந்த பள்ளிகளில் படிக்கும் 2 மாணவர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இரு மாணவர்களும் பள்ளித் தேர்வுக்கு படிக்காததால் தேர்வை ஒத்திவைப்பதற்காக இவ்வாறு செய்ததாக கூறினர். சிறுவர்கள் என்பதால் அறிவுரை வழங்கி அனுப்பியதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

கடந்த 14-ந்தேதி இதே போன்று ஒரு தனியார் பள்ளி மாணவன் பள்ளிக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் அவரது வீட்டிற்குச் சென்று போலீசார் எச்சரித்தனர். மேலும், அந்த மாணவனின் பெற்றோரிடம் அவரது நடவடிக்கை குறித்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தி இருந்தனர்.

Tags:    

Similar News