சரக்கு வாகனம் கவிழ்ந்ததால் விபத்து.. 5 பேர் உயிரிழப்பு
- இந்த விபத்தில் சிக்கி பலர் காயமுற்றனர்.
- சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் மாவட்டத்தில் சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் சிக்கி பலர் காயமுற்றனர்.
விபத்து குறித்து அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்வர் நாக் கூறும் போது, "ஜக்தல்பூரின் தர்பா காவல் நிலை எல்லைக்கு உட்பட்ட சந்தமேட்டா கிராமத்திற்கு அருகே 45 பேரை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் விபத்தில் சிக்கியது," என்றார். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மத்திய ரிசர்வ் காவல் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
"சரக்கு வாகனம் விபத்தில் சிக்கியதாக மாலை 4.30 மணி அளவில் எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதுவரை காயமுற்ற 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் உயிரிழந்தார்," என்று மருத்து அதிகாரியான திலீப் காஷ்யப் தெரிவித்தார்.
இந்த விபத்து நேற்று பிற்பகலில் நடைபெற்ற நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக திலீப் காஷ்யப் தெரிவித்தார்.