அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக்கோரிய மறுசீராய்வு மனு தள்ளுபடி
- அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 26-ந்தேதி உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
- இந்த ஜாமியை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக அமைச்சரான செந்தில் பாலாஜியை சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதனால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
சுமார் 471 நாட்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், உச்சநீதிமன்றம் அவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 26-ந்தேதி ஜாமின் வழங்கியது.
இதனால் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஜாமின் வழங்கியதை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றம் மறுசீராய்வு மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அமலாக்கத்துறை அலுவலகத்தில் வாரத்தில் 2 நாட்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ரூ.25 லட்சம் பிணை தொகையுடன் இரு நபர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சென்னை ஐகோர்ட்டில் 5 முறை ஜாமின் மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் ஜாமின் மனு தாக்கல் செய்த நிலையில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது.