குவைத்தில் 101 வயது தாத்தாவை சந்திப்பீர்களா?... எக்ஸ் பயனர் வேண்டுகோளை நிறைவேற்றிய பிரதமர் மோடி
- குவைத்தில் என்னுடைய 101 வயது தாத்தாவை சந்திப்பீர்களா என வேண்டுகோள்.
- நிச்சயமான சந்திப்பேன் என பிரதமர் மோடி பதில் அளித்திருந்தார்.
இரண்டு நாள் அரசு பயணமாக பிரதமர் மோடி இன்று குவைத் சென்றுள்ளார். வளைகுடா நாட்டிற்கு 43 வருடத்திற்குப் பிறகு செல்லும் இந்திய பிரதமர் மோடி ஆவார். குவைத்தின் முக்கிய தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேச இருக்கிறார்.
பிரதமர் மோடி குவைத் செல்கிறார் என்று தெரிய வந்ததும், எக்ஸ் பயனர் ஒருவர் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு பதிவிட்டிருந்தார்.
அதில் "பிரதமர் மோடிக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். என்னுடைய 101 வயது தாத்தா நானாஜி குவைத்தில் வசித்து வருகிறார். அவர் முன்னாள் ஐ.எஃப்.எஸ். அதிகாரி. இந்திய வம்சாவளியினர் சந்திக்கும்போது அவரை சந்திப்பீர்களா? என்று கேட்டிருந்தார். மேலும், அவர் உங்களுடைய மிகப்பெரிய பிரியர். மற்ற விவரங்கள் அனைத்தும் உங்களுடைய அலுவலகத்தறி்கு அனுப்பி வைத்துள்ளேன்" எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு பிரதமர் மோடி "நிச்சயமாக! நான் உங்கள் தாத்த மங்கல் செயின் ஹண்டாவை சந்திப்பதை எதிர்நோக்கி இருக்கிறேன்" என பதில் அளித்துள்ளார்.
இந்த நிலையில் குவைத் சென்ற பிரதமர் மோடி, மங்கல் செயின் ஹண்டா சந்தித்தார். மேலும், ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை அரபி மொழியில் வெளியிட்ட அப்துல்லாதீப் அல்னெசெஃப், மொழி பெயர்த்த அப்துல்லா பரோன் ஆகியோரையும் சந்தித்தார்.