இந்தியா

தலித் மாணவர்களுக்கான அம்பேத்கர் உதவித்தொகை திட்டம்: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

Published On 2024-12-21 10:12 GMT   |   Update On 2024-12-21 10:12 GMT
  • டாக்டர் அம்பேத்கரை இழிவு படுத்தியதற்கு பதிலடியாக இந்த திட்டம் அறிவிப்பு.
  • அம்பேத்கரை விரும்பும் கோடிக்கணக்கான மக்கள் அமித் ஷா பேச்சால் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

பாராளுமன்ற மாநிலங்களவையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பேசும்போது அம்பேத்கரை இழிவுப்படுத்தும் விதத்தில் பேசினார். இதனால் அமித் ஷா தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். உள்துறை மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் பா.ஜ.க. அம்பேத்கரை இழிப்படுத்தியதற்கு பதிலடியாக டாக்டர் அம்பேத்கர் உதவித்தொகை (Dr Ambedkar Samman Scholarship) திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கெஜ்ரிவால் தெரிவித்தார்.

டெல்லியில் வசிக்கும் தலித் மாணவர்கள் வெளிநாடு சென்று படிப்பதற்கு உதவித்தொகை வழங்கப்படும். அவர்கள் செல்வதற்கான பயணத் தொகை, தங்குவதற்கான செலவு உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே செலுத்தும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

உள்துறை மந்திரி அமித் ஷா பாராளுமன்றத்தில் டாக்டர் அம்பேத்கரை இழிவுப்படுத்தியுள்ளார். அம்பேத்கரை விரும்பும் கோடிக்கணக்கான மக்கள் இதனால் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர் என கெஜ்ரிவால் தெரிவித்தார்.

கல்விதான் முன்னேற வழி என்றும் அனைத்து சவால்களையும் மீறி அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற்றதாகவும் அம்பேத்கர் கூறியதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும் டெல்லி மாநில தலித் மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் அடங்குவர். எந்தவொரு பல்கலைக்கழகங்களிலும் அவர்களுக்கு சீட் கிடைத்தால், அவர்களுடைய கல்வி, பயணம், மற்கும் தங்குவதற்கான அனைத்து செலவினங்களையும் அரசு ஏற்கும். இது டெல்லி மாநில அரசு ஊழியர்கள் குழந்தைகளுக்கும் அடங்கும்.

Tags:    

Similar News