வீடியோ... 8 முறை பல்டி அடித்த சொகுசு கார்: காயமின்றி உயிர் தப்பிய 5 பேர், அதன்பின் கேட்டதுதான் ஹைலைட்...!
- 8 முறை பல்டி அடித்து ஷோரூம் கேட்டில் பயங்கரமாக மோதியது.
- காரில் பயணம் செய்த ஐந்து பேருக்கும் சிறு காயம் கூட ஏற்படவில்லை.
ராஜஸ்தான் மாநிலம் நாகவுரில் நடைபெற்ற விபத்தில் ஐந்து பேர் அதிர்ஷ்டவசமாக தப்பித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.
காரில் டிரைவருடன் ஐந்து பேர் இருந்தனர். கார் வேகமாக சென்று கொண்டிருந்த போது, திடீரென டிரைவர் காரை திருப்ப முயன்றுள்ளார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானது.
நெடுஞ்சாலையில் சுமார் 8 முறை பல்டியடித்தவாறு, சாலையின் அருகில் உள்ள ஷோரூம் கேட்டில் பயங்கரமாக மோதியது. இதில் கார் பலத்த சேதம் அடைந்தது.
ஷோ ரூமில் உள்ளவர்கள் காரில் பயணம் செய்தவர்களுக்க என்ன ஆனதோ? என பதறியடித்து கரை நோக்கி ஓடி வந்தனர்.
அப்போது டிரைவர் காரில் இருந்து குதித்து வெளியேறினார். அதன்பின் ஒவ்வொருவராக காரில் இருந்து வெளியில் வந்தனர். காரில் இருந்து வெளியில் வந்த ஐந்து பேருக்கும் சிறு காயம் கூட ஏற்படவில்லை.
பயங்கரமான விபத்து நடைபெற்றும் காரில் பயணம் செய்தவர்களுக்கு சிறு காயம் கூட ஏற்படாததை ஷோரூம் பணியாளர்கள் வினோதமாக பார்த்தனர்.
அதை விட வினோதம் என்ன வென்றால், காரில் இருந்து வெளியில் வந்தவர்கள் விபத்தை பற்றி அலட்டிக்கொள்ளலாம், ப்ளீஸ் ஒரு கப் டீ கிடைக்குமா? என்று கேட்டதுதான்.