பங்குச் சந்தை: தொடர்ந்து 4-ம் நாளாக உயர்ந்த சென்செக்ஸ், நிஃப்டி
- சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 28 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்துள்ளது.
- நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 44 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்வை கண்டது.
இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை அதிக அளவிலான உயர்வைச் சந்தித்தன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று மதியம் 1,007 புள்ளிகள் உயர்ந்து 76,456 புள்ளிகளைத் தொட்டது. இறுதியாக சென்செக்ஸ் 899.02 புள்ளிகள் உயர்ந்து 76,348.06 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி இன்று மதியம் 309 புள்ளிகள் அதிகரித்து 23,216 புள்ளிகளைத் தொட்டது. இறுதியாக நிஃப்டி 283.05 புள்ளிகள் உயர்ந்து 23,190.65 புள்ளிகளிலும் நிறைவடைந்தது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 28 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்துள்ளது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 44 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்வை கண்டது. தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் இன்று 1% உயர்ந்து வர்த்தகம் ஆனது.