செய்திகள்
விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிய வேண்டாம் - தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.ஏ.சி கடிதம்
விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிய வேண்டாம் என தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.ஏ.சி கடிதம் எழுதி உள்ளார்.
விஜய் மக்கள் இயக்கத்தை, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற்ற இருப்பதாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியிருந்தார். மேலும், இதற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எஸ்.ஏ. சந்திரசேகர் விளக்கம் அளித்திருந்தார்.
இதனிடையே கடந்த நவம்பர் 5-ந் தேதி விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.ஏ.சி கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிய வேண்டாம் என எஸ்.ஏ.சி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி உள்ளார். தனது பெயரை பயன்படுத்த விஜய் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரது தந்தை எஸ்.ஏ.சி கட்சி பணியை தற்காலிகமாக கைவிட்டதாக கூறப்படுகிறது.