இந்தியா

நம்பிக்கை, பக்தி, கலாசாரத்தின் புனித சங்கமம்- பிரதமர் மோடி மகா கும்பமேளா வாழ்த்து

Published On 2025-01-13 11:43 IST   |   Update On 2025-01-13 11:43:00 IST
  • மகா கும்பமேளா இந்தியாவின் காலத்தால் அழியாத ஆன்மீக பாரம்பரியத்தை உள்ளடக்கியது.
  • பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வாழ்த்துகள்.

மகா கும்ப மேளாவையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

பாரதத்தின் பெருமை மற்றும் கலாச்சாரத்தை போற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாளான மகா கும்பமேளா பிரயாக்ராஜில் தொடங்கியுள்ளது. இது நம்பிக்கை, பக்தி மற்றும் கலாசாரத்தின் புனித சங்கமத்தில் எண்ணற்ற மக்களை ஒன்றிணைக்கிறது. மகா கும்பமேளா இந்தியாவின் காலத்தால் அழியாத ஆன்மீக பாரம்பரியத்தை உள்ளடக்கியது. நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டாடுகிறது.

பிரயாக்ராஜ் கோலாகலமாக இருப்பதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். எண்ணற்ற மக்கள் அங்கு வந்து புனித நீராடி ஆசி பெறுகிறார்கள். பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News