சீர்காழி பள்ளியில் மாணவர்களுக்கான கருத்தரங்கம்
- ரெயிலில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை எடுத்து செல்லக்கூடாது.
- இணையத்தில் ரெயில் பயணிகள் 13 லட்சம் பேர் ஒரு நாளுக்கு பதிவு செய்கின்றனர்.
சீர்காழி:
சீர்காழி ச.மு.இ மேல்நிலை ப்ப ள்ளியில் இந்திய இரயில்வே யின் எழுச்சிமிக்க பயணம் என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளுக்கான கருத்தரங்கு பள்ளி தலைமைஆசிரியர் எஸ்.அறிவுடைநம்பி தலைமையில் நடந்தது.
தெற்கு ரயில்வே ஓய்வுபெற்ற அலுவலர் ஆர்.ஞானம்,உடற்கல்வி இயக்குனர் எஸ்.முரளிதரன், ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க தலைவர் கே.கஜேந்திரன்,கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் டி.ராஜராஜன்,ஜி.மார்க்ஸ்பிரியன் முன்னிலை வகித்தனர்.
இதில் ,திருச்சிராபள்ளி தெற்கு ரயில்வே முதுநிலை கோட்ட இயக்கவியல் மேலாளர் எம்.ஹரிக்குமார் பங்கேற்று பேசுகையில் ரயில்வேத்துறை மிகப்பெரிய நிர்வாகத்துறையாக செயல்படுகிறது.
நாட்டில் நாள் ஒன்றுக்கு 22ஆயிரம் இரயில்கள் இயக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு இரண்டரை கோடி மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர்.
ஐஆர்டிசி இணையத்தில் ரயில் பயணிகள் 13லட்சம் பேர் நாள் ஒன்றுக்கு பதிவு செய்கின்றனர்.
திருச்சி தென்ன ரயில்வேயில்13 மாவட்டங்களில் 9ஆயிரத்து 151பேர் பணியாற்றுகின்றனர். ரயில் பயணம் மக்களின் அன்றாட வாழ்வில் அங்கமாக உள்ளது.
அதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.ரயிலில் பயணிக்கும்போது ரயில்வே விதிமுறைகளை மீறி எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள்,எரிபொருட்கள் போன்றவற்றை எடுத்துசெல்வது சட்டப்படி தண்டனைகுரியது.
அதேபோல் ரயில் தண்டவாளங்களில் சிறுவர்கள் கற்களை வைத்து விளையாடக்கூடாது.
ரயில் தண்டவாளங்களை பயன்படுத்துவதே தவறுதான். ரயில்கள் முன்பு செல்பி எடுப்பது, வீடியோ பதிவு செய்வது போன்றவற்றை தவிர்க்கவேண்டும் என்றார.
முன்னதாக ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தலைவர் முஸ்தபா வரவேற்றார். முடிவில் பொருளாளர் நந்தகுமார் நன்றி கூறினார்.