தேனி அருகே காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்கள்
தேனி:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள அம்மாபட்டி மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் முத்துலட்சுமி (வயது 18). 9–ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். கடந்த சில நாட்களாக போடி சங்கராபுரத்தில் உள்ள தனது தாய் மாமன் ராஜூ என்பவரது வீட்டில் இருந்தார்.
அங்கிருந்த முத்துலட்சுமி திடீரென மாயமானார். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த முத்து பிரகாஷ் என்ற வாலிபரை காதலித்து வந்ததும் அவருடன் சென்றிருக்கலாம் எனவும் சந்தேகமடைந்தனர்.
இது குறித்து போடி தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல கம்பத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன் மகள் நேயா பிரியதர்ஷினி (20). சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பிரியதர்ஷினி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. விசாரணையில் இவர் அதே பகுதியைச் சேர்ந்த முத்து என்ற டேவிட் என்ற வாலிபரை காதலித்து வந்தது தெரிய வந்தது.
இது குறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் தெய்வேந்திரன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.