செய்திகள்
திருப்பூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
திருப்பூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை பணிகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகதத்ல் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்த அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் ஜெயந்தி பேசியதாவது:–
திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலைகள் மற்றும் பாலங்கள் பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்., இந்த பணிகளை தரமுள்ள வகையில் பணி மேற்கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய சாலைகள் மற்றும் பாலங்கள் பணி குறித்த மாவட்ட நிர்வாகத்துக்கு விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசியனார்.