செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே கடையை உடைத்து துணிகர கொள்ளை

Published On 2016-07-23 15:54 IST   |   Update On 2016-07-23 15:54:00 IST
ஆண்டிப்பட்டி அருகே கடையை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலைக் குண்டு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது38). இவர் ஊருக்கு முன்புறம் செல்போன் ரீஜார்ஜ் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார். இரவு நேரம் மர்மநபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் அங்கிருந்த பணம் மற்றும் பொருட்களை சுருட்டிக் கொண்டு தலைமறைவானார்கள். மறுநாள் காலை வெங்கடேசன் கடைக்கு வந்தார். அப்போது கடை திறந்துகிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ரூ.5ஆயிரம் ரொக்கம், 3 செல்போன்கள், ரூ.1000 மதிப்புள்ள ரீஜார்ஜ் கார்டுகள் ஆகியன கொள்ளைபோயிருந்தது.

இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்த கைரேகை நிபுணர்கள் மற்றும் போலீசார், மோப்பநாய் லக்கியுடன் விரைந்தனர். மோப்பநாய் கடையிலிருந்து 200 மீ தூரத்தில் உள்ள ரேசன் கடை முன்பு படுத்துக்கொண்டது. எனவே கொள்ளையர்கள் அந்த வழியாக தப்பியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Similar News