செய்திகள்
கரூரில் பசுமை தாயகம் சார்பில் மரக்கன்று நடும் விழா
கரூரில் பசுமை தாயகம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
கரூர்:
பா.ம.க.வின் பசுமை தாயகம் நாள் விழாவை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடந்தது. பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் நகர செயலாளர் ராக்கி முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் பாஸ்கரன் கலந்து கொண்டு மரக்கன்று நட்டு வைத்தார். இதில் கட்சி நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். இதே போன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரம் நடும் விழா நடந்ததாக பாஸ்கரன் தெரிவித்தார்.