செய்திகள்

ஐ.என்.எஸ். போர்க் கப்பல் இன்று சென்னை வந்தது: பொதுமக்கள் பார்க்கலாம்

Published On 2017-04-15 08:25 GMT   |   Update On 2017-04-15 08:25 GMT
அதிநவீன ஐ.என்.எஸ். போர்க் கப்பல் இன்று சென்னை துறைமுகம் வந்தடைந்தது. போர்க்கப்பலை மாணவ- மாணவிகள் மலர்தூவியும், இசைக்கருவிகள் வாசித்தும் வரவேற்றனர்.
சென்னை:

ஐ.என்.எஸ். போர்க் கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21-ந்தேதி மும்பையில் நடந்த விழாவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

அதிநவீன இந்த போர்க் கப்பல் இன்று சென்னை துறைமுகம் வந்தடைந்தது. போர்க்கப்பலை மாணவ- மாணவிகள் மலர்தூவியும், இசைக்கருவிகள் வாசித்தும் வரவேற்றனர்.


இந்த போர்க்கப்பலை இன்று மாலை முதல் பொது மக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தினமும் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.

7,500 டன் எடை கொண்ட ஐ.என்.எஸ். போர்க்கப்பல் 173 மீ. நீளமும், 14.3 மீ. அகலமும் கொண்டது. தரையில் இருந்து கரையின் இலக்கை தாக்கி அழிக்கும் பிரமோஷ் ஏவுகணை, வான் இலக்கை தாக்கி அழிக்கும் பராக் ஏவுகணை ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.


இதுதுவிர 2 ஹெலிகாப்டர்களும் கப்பலில் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கும். எதிரிகள் நீர்மூழ்கி கப்பல் மூலம் தாக்குதல் நடத்தினாலும் அதை எதிர்கொண்டு அழிக்கும் திறன் கொண்டது.

இந்த கப்பலின் சின்னத்தில் நீலநிற கடலும், பின்னணியில் வரலாற்று சிறப்புமிக்க சென்னை புனித ஜார்ஜ் கோட்டையும் இடம் பெற்றுள்ளது.

Similar News