செய்திகள்
செங்கிப்பட்டி அருகே பாம்பு கடித்து சிறுமி பலி
செங்கிப்பட்டியில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை பாம்பு கடித்தது. இதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
பூதலூர்:
செங்கிப்பட்டியை அடுத்துள்ள அயோத்திப்பட்டி அம்பலகாரத்தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முருகேசன், ராதிகா தம்பதியினரின் மகள் வைஷ்ணவி (வயது 2). நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிய போது பாம்பு அவரை கடித்து விட்டது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதை கண்ட பெற்றோர் கதறி அழுதனர். இது குறித்து செங்கிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.