செய்திகள்
சென்னைக்கு ஜூலை மாதம் கிருஷ்ணா தண்ணீர் கிடைக்கும்: தமிழக அரசு அதிகாரி தகவல்
ஜூலை மாதம் தொடக்கம் முதல் ஆந்திர மாநில கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் திறந்து விடப்படும் என்று தமிழக பொதுப் பணித்துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.
சென்னை:
தமிழ்நாடு-ஆந்திரா இடையே கடந்த 1996-ம் ஆண்டு கிருஷ்ணா நீர் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை இரண்டு தவணைகளாக வழங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் வறட்சி, கோடை காலத்தில் சென்னை வாசிக்கு கிருஷ்ணா நீர் கை கொடுத்து வருகிறது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளில் கிருஷ்ணா நீர் வரத்து முற்றிலும் இல்லாமல் இருந்தது. இதையடுத்து இரு மாநில அரசின் நடவடிக்கையின் காரணமாக கடந்த ஆண்டு இறுதியில் கண்டலேறு அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. அதன்படி 2.5 டி.எம்.சி. வரை நீர் திறக்கப்படும் என்று ஆந்திரா அறிவித்து இருந்தது.
இதற்கிடையே திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீரை அந்த மாநில விவசாயிகள் திருட்டு தனமாக பாசனத்துக்கு எடுத்து வந்தனர். மேலும் மதகுகளில் உடைப்பு ஏற்பட்டு நீர் வீணானது. இது போன்ற காணரங்களால் எதிர்பார்த்த அளவு நீர் வரத்து பூண்டி ஏரிக்கு இல்லாமல் இருந்தது. இதையடுத்து அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் ஆந்திரா சென்று சந்திரபாபு நாயுடுவை சந்தித்து கூடுதல் நீர் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து அவர் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டார். இருப்பினும் ஆந்திரா அணையில் இருப்பு குறைவு, வறட்சி காரணமாக நீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் கிருஷ்ணா நீர் வழங்குவதற்காக ஆந்திராவுக்கு செலுத்தவேண்டிய நிலுவைத் தொகை குறித்தும் பேசுவதற்காக ஆந்திர மாநில பொதுப் பணித்துறை அதிகாரிகள் கடந்த 12-ந்தேதி தமிழகம் வந்தனர்.
பேச்சுவார்த்தையின் போது ரூ.362 கோடி நிலுவை தொகை வழங்கப்படும் என்றும், பராமரிப்பு பணிகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆந்திர அதிகாரிகளிடம் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே நடப்பாண்டில் ஆந்திரா வழங்க வேண்டிய கிருஷ்ணா நீரின் தவணைக்காலம் ஜூலை மாதம் தொடங்க உள்ளது. ஆனாலும் நிலுவை தொகை செலுத்தினால் மட்டுமே கிருஷ்ணா நீர் திறக்கப்படும் என்று ஆந்திர மாநில பொதுப் பணித்துறை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தமிழக பொதுப் பணித்துறை உயர் அதிகாரி ஒருவர் இது தொடர்பாக கூறியதாவது:-
இரு மாநில அரசின் கிருஷ்ணா நீர் ஒப்பந்தப்படி ஆந்திராவில் இருந்து நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டில் ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து கிருஷ்ணா நீர் திறந்து விடப்பட உள்ளது. கிருஷ்ணா நீரை திறந்து விடுவதில் சிக்கல் உள்ளது என்று கூறுவதெல்லாம் உண்மை இல்லை. அதோடு நீர் திறந்து விடப்படுவதில் எந்த மாற்றமும் இல்லை. நிலுவையில் உள்ள பராமரிப்பு தொகை வழங்குவது உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் தமிழக அரசு முறைப்படி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
நடப்பாண்டில் பருவமழை நன்றாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் ஓரிரு மாதங்களில் ஆந்திர மாநில அணைகளுக்கு கணிசமான நீர் இருப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதேபோல தமிழக நீர் பிடிப்பு பகுதிகளில் மழை நீர் வரத்து இருக்கும். இதன் காணரமாக இரு மாநிலங்கலும் நிலவும் வறட்சி சூழ்நிலை மாற வாய்ப்பு உள்ளது.
எனவே ஜூலை மாதம் தொடக்கம் முதல் ஆந்திர மாநில கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் திறந்து விடப்படும்.
இவ்வாறு தமிழக பொதுப் பணித்துறை அதிகாரி தெரிவித்தார்.