செய்திகள்
ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு: தமிழ்நாடு முழுவதும் ஓட்டல்கள் அடைப்பு
ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் ஓட்டல்கள் அடைப்பட்டன. ஆன்லைன் மருந்துகள் விற்பனை அனுமதியை கண்டித்து மருந்து கடைகளும் மூடப்பட்டன.
சென்னை:
ஓட்டல்களுக்கான சரக்கு சேவை வரியை (ஜி.எஸ்.டி.) வருகிற ஜூலை மாதம் முதல் உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
அதன்படி ரூ.50 லட்சத்துக்கு குறைவாக வருமானம் உள்ள ஓட்டல்களுக்கு 0.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும், ரூ.50 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ள ஓட்டல்களுக்கு 2 சதவீதமாக விதிக்கப்பட்ட வரியை 12 சதவீதமாகவும் ஏ.சி. வசதி கொண்ட ரெஸ்ட்டாரண்ட் ஓட்டல்களுக்கு 8 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தென் மாநில ஓட்டல்கள் உரிமையாளர்கள் சங்கம் இந்த உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்களில் இன்று ஒருநாள் ஓட்டல்கள் அடைக்கப்படும் என்று அறிவித்தது.
அதன்படி தமிழகம் முழுவதும் இன்று அனைத்து ஓட்டல்களும் அடைக்கப்பட்டன.
தமிழகத்தில் 1½ லட்சம் ஓட்டல்கள் உள்ளன. பெரிய ஓட்டல்கள், ஏ.சி. ரெஸ்டாரண்ட்கள் முதல் சிறிய ஓட்டல்கள் வரை அனைத்தும் மூடப்பட்டன.
சென்னையில் 15 ஆயிரம் ஓட்டல்கள் உள்ளன. அவைகள் அனைத்தும் கடையடைப்பில் பங்கேற்றன. இதனால் வெளியூரில் இருந்து பஸ்களில் இன்று அதிகாலை சென்னை வந்த பயணிகள் சாப்பிட முடியாமல் அவதி அடைந்தனர்.
இதே போல இன்று காலை ரெயிலில் செல்லும் பயணிகளும் ஓட்டலில் உணவு வாங்க முடியாமல் தவித்தனர். தினமும் ஓட்டலில் சாப்பிடுபவர்கள் இன்று சாலையோர கடைகளுக்கு படையெடுத்தனர். இதனால் அங்கு கூட்டம் அலைமோதியது. இதேபோல அம்மா உணவகத்திலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இந்த கடையடைப்பு போராட்டத்தால் தென் மாநிலங்களில் 5 லட்சம் ஓட்டல்கள் அடைக்கப்பட்டன.
அகில இந்திய அளவில் ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனைக்கு அனுமதி அளிக்கவும், மருந்து கொள்முதல் விற்பனை உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய ‘இ-போர்ட்டல்’ எலக்ட்ரானிக்ஸ் சேவையை அறிமுகம் செய்யவும் மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது. இதை கண்டித்து நாடு முழுவதும் மருந்து வணிகர்கள் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் மருந்தகங்கள் உள்ளன. இவைகளில் பெரும்பாலான மருந்தகங்கள் மூடப்பட்டு போராட்டத்தில் பங்கேற்றன.
தமிழ்நாட்டில் 33 ஆயிரம் மருந்தகங்கள் உள்ளன. இதில் 30 ஆயிரம் மருந்து கடைகள் மூடப்பட்டன. ஆஸ்பத்திரியுடன் இணைந்து செயல்படும் மருந்தகங்கள் மட்டும் திறந்திருந்தன.
சென்னையில் 4,300 மருந்து கடைகள் உள்ளன. இதில் சுமார் 4 ஆயிரம் கடை கள் மூடப்பட்டு இருந்தன. இப்போராட்டத்தால் நாடு முழுவதும் ரூ.650 கோடி மருந்து வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் ரூ.45 கோடிக்கு மருந்து வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது.